இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முன்னணி கதாநாயக நடிகர்கள், மற்ற ஹீரோக்களின் படங்களில் நட்புக்காக(?) கௌரவ வேடங்களில் தலைகாட்டுவது புதிதல்ல. காலம் காலமாகவே நடைபெற்று வரும் விஷயம்தான். ஆனாலும் சமீபகாலமாக ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் நட்புக்காக இன்னொரு ஹீரோ நடிப்பது அதிகமாகி விட்டது. சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணியில் உள்ள ஹீரோக்களுக்கிடையில் நட்புணர்வு அரிதாக இருந்தது. போட்டியும் அதைவிட பொறாமையும் அதிகம் இருந்தன. அதனால் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிப்பதையே தவிர்த்தனர்.
சமீபகாலமாக... குறிப்பாக ஆர்யாவின் வருகைக்கு பிறகு இளம் ஹீரோக்களுக்கு மத்தியில் மற்றவர்கள் பொறாமைப்படுகிற அளவுக்கு நட்பு ஏற்பட்டது. அதன் காரணமாக தற்போது ஒரு ஹீரோவின் படத்தில் மற்ற ஹீரோ நட்புக்காக தலைகாட்டுகின்றனர். ராஜேஷ்.எம் தற்போது இயக்கி வரும் படம் - வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க. சுருக்கமாக விஎஸ்ஓபி என்று சொல்லப்படும் இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோ. அவருடைய நண்பரான விஷால் விஎஸ்ஓபி படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு நடிக்கும், இது நம்ம ஆளு படத்தில், சிம்புவுடன் ஜெய் கேமியோ ரோலில் நடிக்கிறார். விஷ்ணு நடிக்கும் இன்று நேற்று நாளை படத்தில் கெஸ்ட் ரோலில் ஆர்யா நடிக்கிறார். கௌதம் கார்த்திக் நடிக்கும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் தனுஷ் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இது ஒரு பக்கமிருக்க, கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ் குமார் நடிக்கும் வஜ்ர கயா என்ற கன்னடப் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி நடித்துவிட்டு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.