இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
குப்பி, காதலர் குடியிருப்பு, வனயுத்தம் படங்களை தமிழ் மற்றும் கன்னட மொழியில் இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் அடுத்து இரண்டு மொழிகளிலும் ஒரு படம் இயக்குகிறார். இதில் அர்ஜுன் மற்றும் ஷாம் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
இதுபற்றி ரமேஷ் கூறியதாவது: குப்பி படம் ராஜீவ் கொலையாளிகள் சிவராசன், சுபா பற்றியது. காதலர் குடியிருப்பு பாபர் மசூதி இடிப்பு பற்றியது, வனயுத்தம் வீரப்பன் என்கவுண்டர் பற்றியது. இப்படி நான் எடுத்த படங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களின் அடிப்படையிலானவை. இந்தப் படமும் அப்படித்தான். அது என்ன சம்பவம் என்று இப்போதைக்கு கூற இயலாது. அர்ஜுன், ஷாம் இருவருமே கன்னட ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்கள் என்பதால் இருவரும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கன்னடத்திற்கும், தமிழுக்கும் தனித்தனி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். கன்னடத்தில் கேம் என்று டைட்டில் வைத்திருக்கிறோம். தமிழ் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை என்கிறார் ரமேஷ்.