இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. ஆந்திரத்தை சேர்ந்த ஜெயப்பிரதா சமாஜ்வாடி ஜனதா கட்சியில் சேர்ந்து எம்.பியாக இருந்தார். அதன் பிறகு அதிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேருகிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தொண்டராக பணியாற்ற விரும்புகிறேன். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறேன். எனது அரசியல் குரு அமர்சிங் என் சார்பாக பேச்சு நடத்தி வருகிறார். பா.ஜ.கவில் சேர்ந்தாலும், பதவியோ தேர்லில் போட்டியிட வாய்ப்போ கேட்க மாட்டேன். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய இப்போது பாரதிய ஜனதா கட்சியே சரியான பாதை என்பதால் அதனை தேர்வு செய்துள்ளேன். என்கிறார் ஜெயபிரதா.