ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாய்ஸ் படத்தில் குண்டு பையனாக அறிமுகமான நகுல், நடிகை தேவயானியின் தம்பி. காதலில் விழுந்தேன் படத்தில் உடல் எடை குறைத்து ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் சுமாராக ஓடியது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. மிகவும் சிரமப்பட்டு நடித்து மிகவும் எதிர்பார்த்த வல்லினம் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக வெளியான நான் ராஜாவாக போகிறேன் படமும் வெற்றி பெறவில்லை.
தற்போது அமளி துமளி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன் மானேஜர் அருணை மாற்றிவிட்டு இனி தன் கால்ஷீட் விவாகாரங்கள், சம்பள விவகாரங்களை கவனிக்க நெக்ளாசிக் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் சினிமாவில் என்ட்ரியாகி 6 வருடங்களாகிறது. எனக்கு நீங்கள் (மீடியாக்கள்) தொடர்ந்து ஆதரவு தந்து வந்திருக்கிறீர்கள். சரியான தொடர்பாளர்கள், மேனேஜர்கள் இல்லாததால் உங்களை நான் சந்திக்க முடிவில்லை. இது எனது தவறு தான். இனி என்னை நீங்கள் எளிதாக அணுகலாம். இதுவரை என் மானேஜராக இருந்த அருணுக்கு நன்றி இனி என் பட விவகாரங்களை நெக்ளாசிக் ஸ்டூடியோ கவனிக்கும்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இது எனக்கு மிகவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. 2015ம் வருடம் எனக்கு நல்ல வருடமாக அமையும் என்று நம்புகிறேன். என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் நகுல்.