Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குவதை மறந்த வெற்றிப்பட இயக்குநர்!

31 ஜன, 2015 - 10:26 IST
எழுத்தின் அளவு:

கலைஞன் வியாபாரியாக மாறும்போது கலைஞன் காணாமல் போய்விடுகிறான் என்று சொல்வார்கள். அது இன்றைய இயக்குநர்கள் பலருக்கும் பொருந்தும். ஒரு படத்தில் வெற்றி கிடைத்ததும் உடனே அடுத்தப்படத்தில் தானே தயாரிப்பாளராகி பணத்தை அள்ள ஆசைப்படுகிறார்கள். இந்த பட்டியலில் மூடர்கூடம் பட இயக்குநர் நவீனும் சேர்ந்துவிட்டார்.


2013 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது பாராட்டுக்களை மட்டுமல்ல வசூலையும் அள்ளிக்குவித்த படம் மூடர்கூடம். ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் இப்படத்தை தானே தயாரித்து இயக்கினார் புதுமுக இயக்குநரான எஸ்.நவீன். தன் உறவினர்களிடம் பணம் கடன் வாங்கி, சென்ட்ராயன், ராஜாஜி, குபேரன் என அதிகம் பிரபலமடையாத நடிகர்களை வைத்து தானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மூடர்கூடம் படத்தை எடுத்தார்.


சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை பாண்டிராஜ் வாங்கி வெளியிட்டார். செமத்தியாய் லாபம் பார்த்தார். இப்படத்தைத் தொடர்ந்து நவீன் அடுத்த படத்தை இயக்குவார் என நினைத்தால்,, இயக்கத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு சத்தமில்லாமல் ஒரு படத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார். அவரிடம் அசோஷியேட்டாக இருந்த தனராம் சரவணனை இயக்குநராக்கி அந்தப்படத்தை நவீன் தயாரிக்கிறார்.


மூடர்கூடம் ராஜாஜி ஹீரவாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மூடர்கூடம் படத்தைப்போல் இதுவும் பிளாக் காமெடிப் படமா? கிராமத்துப் பின்னணியில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப்படம் இருக்கும் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in