ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அமெரிக்காவில் முடித்துவிட்டு வந்த கமல் தற்போது டப்பிங் பேசி வருகிறார். தான் டப்பிங் பேசும்போது மட்டுமல்ல, மற்ற நடிகர்கள் டப்பிங் பேசும்போது அப்படத்தின் இயக்குநரைப்போல் அருகில் இருந்து கவனித்து வருகிறார் கமல். தற்போது நாசர் டப்பிங் பேசி வருகிறார். கமலும் உடனிருந்து மெருகேற்றி வருகிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள உத்தமவில்லன்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இசை வெளியீடு முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து உத்தம வில்லன் படத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், ஊர்வசி, இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஜெயராம் முதலானோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது உத்தமவில்லன்.
இப்படம் வெளியாகும் ஏப்ரல்-2 ஆம் தேதியன்றுதான் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து தயாரித்துள்ள நண்பேன்டா படமும் ரிலீசாகவிருக்கிறது. எனவே இரண்டு பட நிறுவனங்களும் இப்போதே தியேட்டர்களை வளைக்கும் வேலையை தொடங்கிவிட்டனர்.