‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சசி இயக்கத்தில் லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்த படம் சொல்லாமலே. கெளசல்யா நாயகியாக நடித்திருந்தார். பிரகாஷ்ராஜ் முக்கியத்துவம் வாய்ந்த டாக்டராக நடிக்க, விவேக், கரண், வையாபுரி என பலரும் நடித்திருந்தனர். பாபி இசையமைத்திருந்தார். 1998-ல் வெளியான இப்படத்துக்கு இசையமைத்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருதினையும் பெற்றார் பாபி. குறிப்பாக, அந்த படத்தில் ஹரிஹரன்- சித்ரா இணைந்து பாடிய டூயட் பாடலான சொல்லாதே சொல்லச்சொல்லாதே -என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அந்த பாடலே அவருக்கு விருதினையும் வாங்கிக்கொடுத்தது. ஆனபோதும், அதன்பிறகு நேசம் புதுசு உள்பட சில படங்களுக்கு இசையமைத்த பாபியை அதன்பிறகு பல ஆண்டுகளாக சினிமாவில் காண முடியவிலலை. ஆனால், நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது கன்னக்கோல் என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார் பாபி. வி.ஏ. குமரேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் நாடோடிகள் பரணி, காருண்யா, கஞ்சாகருப்பு என பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இன்றைய காலகட்டத்துக்கு ரசிகர்களின் ரசனைக்கேற்ப சூப்பர் ஹிட் பாடல்களாக உருவாக்கியிருப்பதாக சொல்லும் பாபி, இப்படம் எனக்கு ந்ல்லதொரு ரீ-என்ட்ரியாக அமையும் எதிர்பார்க்கிறார்.