மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'அமரகாவியம்' அழகி மியா தற்போது மலையாளத்தில் '32ஆம் அத்தியாயம் 23ஆம் வாக்கியம்' என்கிற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ராமகிருஷ்ணன் மற்றும் அர்ஜுன் பிரபாகரன் என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்தப்படத்தை இயக்குகிறார்கள். நேற்று முன்தினம் மியாவின் பிறந்தநாள்.. மியா இதுபற்றி படப்பிடிப்பில் யாரிடமும் எதுவும் சொல்லிக்கொளவும் இல்லை.. ஆனால் அவரது பிறந்தநாள் பற்றி முன்கூட்டியே தெரியவந்த படக்குழுவினர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது என முடிவு செய்தனர்.
பிறந்தநாளன்று வழக்கம்போல் செட்டுக்கு வந்த மியாவிடம் யாரும் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை.. அவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவும் இல்லை. பதினோரு மணியளவில் அடுத்த ஷாட் ரெடி என்றதும் ஸ்பாட்டிற்கு வந்த மியா சந்தோஷத்தில் அப்படியே திகைத்து நின்றுவிட்டார். படப்பிடிப்பு குழுவினர் மிகப்பெரிய கேக்கை வரவழைத்திருந்தனர். மியாவை கேக் வெட்டவைத்து அதன்பின் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். யூனிட்டாரின் இந்த சர்ப்ரைஸ் பார்ட்டியால் நெகிழ்ந்துபோய்விட்டாராம் மியா.