இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
'லிங்கா' படத்திற்காக எழுந்த பிரச்சனைகளைத் தீர்க்குமாறு ரஜினி சொன்னதையடுத்து நஷ்டக் கணக்கை ஒரு குழுவினர் கணக்கிட்டு வருகிறார்கள். அந்தப் பிரச்சனையை ஒரு வழியாக முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'லிங்கா' படம் எதிர்பாராமல் தோல்வியைத் தழுவியது. அதன் பின் எழுந்த பிரச்சனைகள் அனைவரும் அறிந்ததே.
இருந்தாலும் அடுத்து ஒரு மிகப் பெரிய வரலாற்று வெற்றியை கொடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறாராம். அதற்கு என்ன செய்யலாம் என்று அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் இணைவது என்பதும் அதில் ஒன்றாக இருக்கிறதாம். இருவரும் இணைந்த 'சிவாஜி, எந்திரன்' போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வரலாறு சாதனை படைத்த வெற்றிகளைக் குவித்த படங்கள். தற்போதைக்கு ஷங்கரை விட்டால் தன்னை சிறப்பாக இயக்க வேறு யாருமில்லை என ரஜினிகாந்த் நினைக்கிறாராம்.
ராஜமௌலி படத்தில் நடிக்க ரெடி என ரஜினி சொன்னாலும், அவர் 'பாகுபலி' படத்தை இரண்டு பாகமாக வெளியிட உள்ளார். அந்தப் படத்தின் வேலைகளே இந்த ஆண்டு கடைசி வரை தொடரும். அப்படியானால் ஷங்கருக்கு அடுத்து புதிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவருடனே மீண்டும் இணையாம் என நினைக்கிறாராம். அவருக்கு நெருக்கமானவர்கள் கூட அதுதான் சிறந்தது என்றும் சொல்வதாகத் தெரிகிறது.
'லிங்கா' பிரச்சனை முடிவுக்கு வந்த பின் உடனடியாக ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. இழந்த பெயரை மீண்டும் மீட்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி இருக்கிறார், அதனால் அடுத்து ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுக்கும் அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
'பராசக்தி ஹீரோ'க்கு அந்த 'சக்தி' கிடைக்கட்டும், மீண்டும் ஒரு சாதனை வெற்றியைக் கொடுக்கட்டும்.