'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரசிகர்கள் எதிர்பார்க்கும் பெரிய படங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளிவரவிருப்பது அஜித் நடிக்கும் என்னை அறிந்தால்.
கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் உடன், அனுஷ்கா, த்ரிஷா, உட்பட பலர் நடித்திருக்கும் என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த வீரம் படத்திற்குப் பிறகு சரியாக ஒரு வருட இடைவெளியில் என்னை அறிந்தால் படம் வெளியாவதால் அஜித்தின் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் அனேகன் படம் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான 13 ஆம் தேதி ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் அனேகன் வெளியாவதாக தகவல். முதல்முறையாக தனுஷ் நடித்த படம் இத்தனை அதிக எண்ணிக்கையில் வெளியாகிறது.
தனுஷின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் காக்கி சட்டை படம் பொங்கலுக்கே ரிலீஸாக வேண்டியது. ஐ படத்தின் ரிலீஸ் காரணமாகவும், என்னை அறிந்தால் ரிலீஸ் காரணமாகவும் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே போனது. கடைசியாக, இப்போது வரும் பிப்ரவரி 27ஆம் தேதி காக்கி சட்டை படம் வெளியாகவிருக்கிறது. காக்கி சட்டை படத்தை வாங்கி வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார்கள்.
இந்த மூன்று படங்கள் தவிர கார்த்தி நடித்த கொம்பன் படமும் பிப்ரவரி மாதம் வெளிவர வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் பிப்ரவரி மாதம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான மாதம்தான்.