ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தயாரிப்பாளரும், யுடிவி மோஷன் பிக்சர்சின் தென் மண்டல தலைவருமான தனஞ்செயன் ஏற்கெனவே தி பிரைட் ஆஃப் தமிழ் சினிமா என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அது தமிழில் வெளிவந்த முக்கியமான படங்களைப் பற்றிய தகவல் தொகுப்பாகும். அடுத்து தற்போது வெள்ளித் திரையின் வெற்றி ரகசியங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இது அவர் திரைப்படம் தொடர்பாக பத்திரிகைகளில் எழுதிய கட்டுரை தொகுப்பாகும்.
இதன் வெளியீட்டு விழா ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. கமல்ஹாசன் வெளியிட்டார். நடிகர் நாசர் பெற்றுக் கொண்டார். "திரைப்படம் குறித்து தமிழில் நிறைய புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டும், அப்போதுதான் அவற்றின் வீச்சும், தாக்கமும் அதிகமாக இருக்கும். தனஞ்செயன் தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும்" என்று கமல் கேட்டுக் கொண்டார்.