இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
விக்னேஷ் தயாரித்து நடித்துள்ள படம் அவன் அவள். இந்த படத்துக்கு முதலில் பூனை என்றதான் பெயர் வைத்திருந்தார். ஆனால், பின்னர் அந்த டைட்டில் பிடிக்கவில்லை என்று பலரும் சொன்னதையடுத்து அவன் அவள் என்று மாற்றினார். மேலும், இந்த படத்தை விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை முயற்சி செய்த விக்னேஷ், இப்போது யாருமே படத்தை வாங்க முன்வராததால் தானே வெளியிடவும் தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அந்த படத்தில் நடித்த சில நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் அவர் தங்களுடன் மோதிக்கொண்டதாக சொல்லி பீல் பண்ணி வருகிறார்கள். குறிப்பாக, படத்தில் நடித்த சிலருக்கு இன்னும் சம்பளத்தை முழுசாக கொடுக்கவில்லையாம். இதனால் படப்பிடிப்பு நடந்தபோது அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டதாம். அதன்காரணமாக, அவர்களிடம் வேண்டுமென்றே டென்சனை காட்டினாராம் விக்னேஷ். அதோடு, மலை உச்சிக்கு செல்வதற்கு சிலரை மட்டுமே காரில் ஏற்றிக்கொண்டவர், சிலரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடக்க விட்டாராம். அதனால் அந்த படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து விட்டு வெளியேறிய அவர்கள், தங்களை சந்திப்பவர்களிடம், அந்த கொடுமையை ஏன் கேட்கிறீங்க? என்றபடி கதை கதையாய் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.