Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவை துரத்தும் அச்சம்!

30 ஜன, 2015 - 10:20 IST
எழுத்தின் அளவு:

விஜய்யுடன் வேலாயுதம் படத்திற்கு பிறகு புலியில் மீண்டும் இணைந்திருக்கிறார் ஹன்சிகா. இது அவரைப்பொறுத்தவரை சந்தோசமான விசயமே. எனறபோதும, இன்னொரு ஹீரோயினியாக அதே படத்தில் ஸ்ருதிஹாசனும இருப்பதுதான் அவருக்கு பெரிய தலைவலியாகியிருக்கிறது. முதலில் கதை சொன்னபோது இரண்டு ஹீரோயினுக்குமே ஒரே மாதிரியான ரோல்தான் என்று சிம்புதேவன் சொன்னபோதும், ஒருவேளை ஸ்ருதிஹாசனின் ரோல் பெரிதாகி விட்டால் நாம் டம்மியாகி விடுவோமே என்கிற அச்சம் ஹன்சிகாவை தொடர்ந்து துரத்திக்கொண்டேயிருக்கிறதாம்.


மேலும், இது பெரிய படம். அதனால் இந்த படத்தில் யாருக்கு என்ன வேடம் என்பதை ஆராய்ந்து கொண்டிருந்தால் பிரச்சினையாகி விடும் என்பதால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கும் ஹன்சிகா, தனக்கான காட்சிகளில் இதுவரையில்லாத அளவுக்கு அதிக ஈடுபாடு காட்டி நடிக்கிறாராம். தனக்கு கிடைக்கிற வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது இபபோதைய நோக்கமாக இருக்கிறதாம்.


அதனால், வசன காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் அதேவேளையில் நடனத்திலும் மூவ்மெண்டை அசத்தலாக கொடுத்து வருகிறாராம் அதோடு யூனிட்டில் உள்ள சில அனுபவசாலி நண்பர்களிடம், தான் ஷாட்டில் நடித்து முடித்ததும் தனது நடிப்பு குறித்து கருத்து கேட்கும் ஹன்சிகா, நான் செய்வதில் ஏதாவது தவறு தென்பட்டால் உடனே அதை என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் என்றும் அவர்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளாராம். அப்படி அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டும் பட்சத்தில், அதை டைரக்டரிடம் ரீடேக் வாங்கி நடித்து விடுகிறாராம் ஹன்சிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in