ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிலவே மலரே, அன்புள்ள அப்பா, ஒருவர் வாழும் ஆலயம் என கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய ரகுமான், அதன்பிறகு ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால் ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கத் தொடங்கினார். அந்தவகையில், அஜீத்தின் பில்லா, பில்லா-2, சூர்யா நடித்த சிங்கம்-2 ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தார். இதில் சிங்கம்-2வில் சில வில்லன்களில் ரகுமானும் ஒருவராக நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹவ் ஓல்டு ஆர் யூ ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு பாசிட்டிவான வேடம் என்றபோதும், அடுத்தபடியாக வில்லனாக ஒரு பெரிய ரவுண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ரகுமான். அதனால், சில முன்னணி டைரக்டர்களிடம் நெகட்டிவ் வேடங்கள் இருந்தால் கொடுங்கள் என்று ஓபனாக கேட்கத் தொடங்கியிருக்கிறார்.