‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இந்தியாவின் தற்போதைய சிறந்த இயக்குனர்களில் தென்னிந்தியாவிலிருந்து இருவர் கண்டிப்பாக குறிப்பிடப்படுவர், அவர்களில் ஒருவர் ஷங்கர், இன்னொருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இருவருமே பிரம்மாண்டமானப் படங்களின் மூலமும் அவர்களுடைய கிரியேட்டிவிட்டி மூலமும் பேசப்பட்டு வருபவர்கள். ரஜினிகாந்த் கூட ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூட சமீபத்தில் பேசியிருந்தார். ஷங்கருடன் இணைய தெலுங்கில் பல முன்னணி நடிகர்களும் தயாராக காத்திருக்கிறார்கள்.
இருவருமே இன்றைய இளம் ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அந்த விஷயத்தில் இயக்குனர் ராஜமௌலி, ஷங்கரை ஓவர் டேக் செய்துவிட்டார். சமூக வலைத்தளங்களில் ராஜமெளலி மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். அவருடைய படத்தைப் பற்றியும் இன்னும் சில விஷயங்களைப் பற்றியும் ஏதாவது ஒரு பதிவு போட்டுக் கொண்டேயிருப்பார். அதனால் அவரை சமூக வலைத்தளங்களில் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தைப் பெற்றிருக்கிறது.
பேஸ்புக்கில் ராஜமௌலியை 26 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்கிறார்கள். டிவிட்டரில் நேற்றுதான் 10 லட்சத்தைக் கடந்தார் ராஜமௌலி. ஆனால், ஷங்கருக்கு பேஸ்புக்கில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்தான் தொடர்கிறார்கள். டிவிட்டரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களே தொடர்கிறார்கள்.
ஒரு இயக்குனருக்கு சில முன்னணி நடிகர்களைப் போல அதிகம் பேர் தொடர்பாளர்களாக இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். அந்த சாதனையை ராஜமௌலி படைத்திருக்கிறார். அவருடைய இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் 'பாகுபலி' படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனோ, தமிழ் நட்சத்திரங்களும், தமிழ் இயக்குனர்களும் சமூக வலைத்தளங்களில் செயல்படுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அது ரசிகர்களை சென்றடைய மிகவும் எளிதான வழி என்பது அவர்களுக்கு இன்னுமா தெரியாமல் இருக்கும்....?