'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
காமெடி நடிகர் கருணாஸ் தானே தயாரிப்பாளராகி, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம் படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் அவருக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கவே இனி படம் தயாரிக்கப்போவதில்லை என்றும் ஹீரோவாக நடிக்கப்போதில்லை என்றும் அறிவித்துவிட்டார். என்றாலும், அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது கமிட்டான ''லொடுக்கு பாண்டி'' ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் கருணாசுடன் நேகா சக்சேனா, இளவரசு, செண்ட்ராயன் நடித்துள்ளனர். ரஜனீஷ் இயக்குகிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: கருணாஸ் நடித்த முதல் படமான நந்தாவில் அவரது கேரக்டரின் பெயர் ''லொடுக்கு பாண்டி'' அதைத்தான் படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை ஏமாற்றுவது, இன்னொருவரது வாழ்கையை தட்டி பறிப்பது, திருட்டு வாழ்க்கை என்று வாழ்வதை விட்டு நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம். நேர்மையில்லாமல் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதே! நிரந்தரமல்ல. என்கிற கருத்தை படு சுவாரஸ்மாக, காமெடியாக உருவாக்கி உள்ளோம்.. விரைவில் திரைக்கு வருகிறது" என்றார் இயக்குனர் ரஜனீஷ்.