தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய், சமந்தா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, ''கத்தி'' படம் அக்டோபர் 22ந் தேதி தீபாவளி அன்று வெளிவந்தது. 100 கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. கத்தி 50வது நாளை கூட மூன்று தியேட்டர்ளில் தினசரி ஒரு காட்சியாகத்தான் கடந்தது. அப்போது அந்த செய்தியை வெளியிடும்போதே 100 வது நாள் போஸ்டர் ஒட்டாமல் விடமாட்டார்கள். ஏதாவது ஒரு தியேட்டரில் ஓட்டி ஓட்டிவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்.
அதேபோல இப்போது பேபி ஆல்பட் தியேட்டரிலும், மாயாஜால், ரோஹினி வளாகங்களிலும் 100 நாள் ஓடியதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் அதிக வசூலை கொடுத்த படம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். படத்தை லைக்கா நிறுவனமும், ஐயங்கரன் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்தின் கதை வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது.