‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
காக்க காக்க படத்தில் சினிமாவுக்கு வந்தவர் சின்னத்திரை நடிகை தேவதர்ஷினி. அதையடுத்து பார்த்திபன் கனவு, சரோஜா, எந்திரன், காஞ்சனா, சகுனி, கண்ணா லட்டு தின்ன ஆசையா என பல படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்தார். முக்கியமாக, அவரது காமெடியான நடிப்புக்காகவே அவரை புக் பண்ணுகிறார்கள்.
அந்த வகையில் ஆரம்பத்தில் கோவை சரளா போன்ற நடிகைகளுடன் இணைந்து நடித்து வந்த தேவதர்ஷினி, இப்போது காமெடி காட்சிகளில் ஷோலோவாகவே கலக்கி வருகிறார். அதனால், தம்பி ராமைய்யா, விடிவி கணேஷ், சிங்கம்புலி போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில் காமெடி நடிகையாக இவர் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார். அதோடு, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் தேவதர்ஷினி கலந்து நடிப்பதால் அவரை டபுள் ஓகேவாக நினைக்கிறார்கள்.
இதனால் இப்போது டைரக்டர்கள் விரும்பும் நடிகையாகி விட்டார் அவர். அதனால் தேவதர்ஷினிக்கு கோலிவுட்டில் டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. விளைவு, எல்லா நடிகைகளையும் போலவே இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் அவர், தற்போது தனது படக்கூலியை உயர்த்தி விட்டுள்ளாராம்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என சும்மாவா சொன்னார்கள்...?!