ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'ஐ' திரைப்படம் தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியானது. அங்கு ஆரம்பத்தில் படத்தைப் பற்றிய பேச்சுக்கள் எதிர்மறையாக இருந்த காரணத்தால் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறாது என்றே சொன்னார்கள். ஆனால், பலரின் கணிப்புக்களையும் பொய்யாக்கி 'ஐ' படம் இன்று வரை நல்ல வசூலைப் பெற்று வருகிறது. அது மட்டுமல்ல தெலுங்கில் வெங்கடேஷ், பவன் கல்யாண் நடித்த 'கோபாலா கோபாலா' படத்தின் வசூலையும் சில ஏரியாக்களில் மிஞ்சி விட்டது என்கிறார்கள்.
'ஐ' படத்தின் வெற்றியால்தான் அந்தப் படத்தின் வசூல் பாதிப்படைந்த்து என்கிறார்கள். 'கோபாலா கோபாலா' படத்தின் தயாரிப்பாளர்கள் 'ஐ' படத்தின் வசூலைப் பார்த்து கடுப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், தெலுங்கு நேரடிப் படங்கள் வரும் போது டப்பிங் படங்கள் வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
சுமார் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் ஆன 'ஐ' திரைப்படம் அதற்கும் மேலாக சுமார் 40 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'கோபாலா கோபாலா' படத்தின் வசூல் 50 கோடியை நெருங்கி வந்திருந்தாலும் 'ஐ' படம் வெளிவராமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக வசூலித்திருக்கும் என்றும் சொல்கிறார்கள். ஒரு டப்பிங் திரைப்படம் நேரடிப் படங்களை விட அதிகமாக வசூல் பெறுவது தெலுங்குத் திரையுலகில் ஆச்சரியமான விஷயமல்ல. இதற்கு முன் 'எந்திரன்' திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பே நல்ல வசூலைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் 'எந்திரன்' கொடுத்த லாபத்தைவிட 'ஐ' படம் அதிக லாபத்தைத் தருமா என்றுதான் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.