தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாம் ஏற்கெனவே சொல்லியருந்தபடி 'ஐ' படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டிவிடும் என்றே தெரிகிறது. ஜனவரி 14ம் தேதி வெளிவந்த 'ஐ' திரைப்படம் நேற்றுடன் இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெரும்பாலான திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. பகல் நேரக் காட்சிகளில் ஓரளவிற்குக் கூட்டம் குறைந்தாலும் மாலை நேரக் காட்சிகளிலும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் நல்ல கூட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதாகத் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களில் 'ஐ' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 கோடி ரூபாய் வரை வசூலைக் குவித்திருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 40 கோடி ரூபாயும், கேரளாவில் 15, கர்நாடகாவில் 12, மற்ற மாநிலங்களில் 5 கோடி ரூபாயும், பிற நாடுகளில் 40 கோடி ரூபாயும், ஹிந்தி மொழி வெளியீட்டில் சுமார் 20 கோடி ரூபாயும் என மொத்தமாக 197 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களில் 'எந்திரன்' படத்திற்குப் பிறகு அதிக வசூலைக் குவிக்கும் ஒரே படம் என்ற பெருமையை 'ஐ' படம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் அதிக வசூல் என்று சொல்லப்பட்ட 'கத்தி' படத்தின் வசூலையும் மிஞ்சி புதிய சாதனையை இந்தப் படம் படைத்து வருகிறது.
இவ்வளவுத் தொகை வசூலைப் படம் அள்ளியிருந்தாலும் லாபம் என்ற கணக்கில் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் அளவுக்கதிகமான லாபம் இல்லை என்றாலும் நல்ல லாபத்தைத் தற்போது தர ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் போது லாபத்தில் பங்கு ஓரளவுக்குக் குறைந்துதான் இருக்கும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நல்ல வசூலாகும் போதுதான் லாபத்தில் பங்கும் அதிகமாக இருக்கும். 'ஐ' படத்தைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய பட்ஜெட் என்பதே லாபத்தில் பங்கு என்பது திட்டமாகவே இருக்கும்.