வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
கடந்தாண்டு, கோலிவுட்டின், 'நம்பர் - 1' ரேசில், ஹன்சிகாவுடன் சளைக்காமல் ஓடி முத்திரை பதித்தார் நயன்தாரா. இந்தாண்டும், நயன்தாரா கைகளில் கணிசமான படங்கள் உள்ளன. நயனின் இரண்டாவது 'இன்னிங்ஸ்' முடிவே இல்லாமல் தொடருவதால் சக நடிகைகள் ஆச்சரியமும், கலக்கமும் அடைந்துள்ளனர். இப்போது அவருக்கு, மூன்று படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில், சிம்புதேவன் படத்தை அடுத்து, அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்தில் தகவல் உலா வருகிறது. இதில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை படக் குழுவினர் அணுகியதாகவும், தற்போது 'பிசி'யாக இருப்பதால், இப்போதைக்கு நடிக்க முடியாது என, நயன் கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மற்றொரு முன்னணி நடிகைக்கு துாது விட்டுள்ள படக்குழு, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?' என, லட்சுமி ராமகிருஷ்ணன் பாணியில், 'கமென்ட்' அடித்து, மனதை தேற்றி வருகின்றனர்.