‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் அஜித், திருப்பதியில், சாமி தரிசனம் செய்தார். வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜித்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் நின்று, அஜித் போட்டோக்கள் எடுத்துக் கொண்டார். சிலர் அவருக்கு பரிசாக திருப்பதி ஏழுமலையான் படத்தை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு, ரசிகர்களை நலம் விசாரித்தார் அஜித். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பினார்.
வீரம் படம் முடிந்ததும், அஜித், இயக்குநர் சிவாவுடன், திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டுக் கொண்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது