ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நேரம் படத்தை இயக்கி தமிழில் ஒரு எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்திரன். சொல்லப்போனால் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா என மூவருக்கும் சினிமாவில் அடித்தளம் அமைத்துகொடுத்தவர் இவர் தான். அடுத்து இவர் என்ன படம் இயக்கப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, அவரோ சைலன்ட்டாக இரண்டு வருடம் இடைவெளி விட்டுவிட்டு இப்போது தான் தனது அடுத்த படத்திற்கு பூஜை போட்டிருக்கிறார்.. படத்தின் ஹீரோ அவரது பேவரிட்டான நிவின் பாலி தான். படத்தின் டைட்டில் 'பிரேமம்'.. ஆனால் ஹீரோயின் யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. இந்தப்படத்திற்கான பூஜையில் மலையாள இளம் முன்னணி நடிகர்களான பஹத் பாசில் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் கலந்துகொண்டனர்.. இவர்கள் இருவரும் ஏற்கனவே நிவின் பாலியுடன் இணைந்து 'பெங்களூரு டேய்ஸ்' படத்தில் நடித்தபோது பிரிக்கமுடியாத நண்பர்களாகிவிட்டனர். அதனால் தான் நிவின் நடிக்கும் படத்தின் பூஜை என்றதும் உடனே ஆஜராகிவிட்டார்களாம்.