தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்னொருவன் என்ற படத்தில் அறிமுகமானவர் நந்தகி. அதையடுத்து அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடித்தார். ஆனால் முதல் இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்ததால் அதையடுத்து அவருக்கு படங்களே இல்லை. அதனால் வீரம், நீர்ப்பறவை படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தவர், விமல் நடித்த நேற்று இன்று படத்தில் படுகவர்ச்சியான ஒரு வேடத்தில் நடித்தார். ஆனால் அந்த படமும் வெற்றி பெறவில்லை என்பதால் ராசியில்லாத நடிகை என்று அவரை டோட்டல் கோடம்பாக்கமே ஓரங்கட்டி விட்டது. அதனால் தற்போது, தனது பெயரை மனோ சித்ரா என்று மாற்றி வைத்துக்கொண்டு அடங்காதவன் என்றொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த நிலையில், தன்னைத்தேடி ஏதாவது புதிய படவாய்ப்புகள் வந்தால், கதை கேட்பதற்கு முன்பே யாராக இருந்தாலும், அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம், இயக்குபவர், கேமராமேன், நடிப்பவர்கள் என மொத்த லிஸ்டையும் என்னிடம் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் அந்த படத்தில நடிக்க கதை கேட்பதா வேண்டாமா என்று நான் முடிவு செய்வேன் என்ற எக்கச்சக்கமாக பேசுகிறாராம் மனோசித்ரா. இதனால் நடித்த ஒரு படம்கூட ஓடவில்லை. அதற்குள் இவ்வளவு கண்டிசன் போடுகிறாரே என்று அவரை புக் பண்ண செல்பவர்கள் விழுந்தடித்து ஓடி வருகின்றனர்.