இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் இளைஞர்களைப் பற்றிய கதையில் உருவாகியிருக்கிறது. சென்னைக்கு வந்து வாடகை வீட்டில் தங்கியிருப்பது, வேலை தேடுவது, காதல் என அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகியுள்ளதாம். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடந்தபோது , படத்தை வெளியிடும் மதுராஜ் பேசுகையில், நான் கே.பாக்யராஜ் சாரிடம் உதவியாளராக இருந்தவன். இப்போது இந்த வாங்கி படத்தை வெளியிடுகிறேன். இதையடுத்து இந்த படத்தை இயக்கிய மருதுபாண்டியனுக்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கொடுக்கிறேன். மேலும், சினிமாவில் வாய்ப்பு தேடி வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல், சாப்பிட உணவு இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு வருகிறார்கள். இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கும் பல சினிமாக்காரர்களும் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வந்தவர்கள்தான்.
அதனால், தற்போது சினிமாவில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு எனது அலுவலகத்தில் 3 மாதங்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுக்க இருககிறேன். அதேபோல், அவர்கள் இங்கு தங்கும் 3 மாதங்களுக்கும் அம்மா ஹோட்டல் உணவும் கொடுக்கிறேன்.. நகரங்களில் இருந்தோ அல்லது குக்கிராமங்களில் இருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் இந்த உதவி செய்து கொடுக்கப்படும். இதற்காக சென்னையில் உள்ள எனது அலுவலக வாசல்கள் திறந்தே உள்ளது என்றார்.