பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய சினிமாவில் மோசமான அரசியல்வாதிகளையும், ஊழல் அரசு அதிகாரிகளையும் தயங்காமல் தட்டிக்கேட்கும் பவர் கொஞ்ச வருடங்கள் முன்புவரை தமிழில் விஜயகாந்திற்கு தரப்பட்டிருந்தது, என்றால் தெலுங்கில் அந்த வேலையை கவனித்துக்கொண்டவர் 'இது தாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர். கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த படங்கள் வசூலை வாரிக்குவித்ததோடு மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கையும் ஏற்படுத்தின.
ஆனால் கடந்த ஐந்து வருடமாக இவர் நடித்த படங்கள்.. ஸாரி.. படம் எத்தனை தெரியுமா..? ஒன்றே ஒன்றுதான்... ஹீரோவாக நடிப்பது இனி வேலைக்காகாது என்பதால், கடைசியில், முன்னாள் ஆக்சன் ஹீரோக்கள் எல்லோரும் துண்டுபோடும், கேரக்டர் ரோல் ஏரியாவில் இடம்பிடிக்க ராஜசேகரும் மனதளவில் தயாராகி வருகிறார். தற்போது இவர் எதிர்பார்ப்பது ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கதையின் நாயகனாக, இளம்பெண்ணுக்கு தந்தையாக இவர் நடித்துள்ள 'பட்டப்பகலு' படத்தின் ரிலீசைத்தான். ஒரு ஹிட்டாவது கொடுத்து, தான் ஒரு சூப்பர் ஹீரோதான் என நிரூபித்த பின்னரே குணச்சித்திர அரிதாரம் பூசுவாராம்.. அதுகூட ஏதோ ஏனோதானோ என்கிற ரோலாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் தான் சம்மதிப்பாராம்.