சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
நடிகை சுஹாசினியின் சகோதரி அனுஹாசன், இந்திரா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்தார். தொகுப்பாளராக இருந்தார். பின்னர் லண்டனில் உள்ள வெள்ளைக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது அவர் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் சன்னி சைட்அப் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். இதுவரை எழுதிய கட்டுரைகளை தொகுத்து சன்னி சைட்அப் என்ற பெயரிலேயே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ஹர்பல் கலியன்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதில் தன் வாழ்க்கையோடு தொடர்புடைய பல சம்பவங்களை, தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். சுவாரஸ்யமான நல்ல மெசேஜ்களுடன் கூடிய கட்டுரைகளின் தொகுப்பு இது. எக்ஸ்பிரஸ் அவன்யூவில் நடந்த விழாவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்த புத்தகத்தை வெளியிட்டார்.
அனுஹாசன் எழுத்தாளராகி இருப்பதுடன் லண்டனில் நடக்கும் புகழ்பெற்ற நாடகம் ஒன்றில் இந்திய பெண்ணாக நடிக்கிறார். தலையின் முன்பக்கம் முடிகொட்ட ஆரம்பித்திருப்பதால் அதை மறைக்கும் வகையில் ஹேர் ஸ்டைலையும் மாற்றி இருக்கிறார். தமிழில் அவர் நடித்துள்ள கானகம் என்ற படம் வெளிவரவேண்டியது இருக்கிறது.