ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
வீரா, ரெஜினா நடித்துள்ள ராஜதந்திரம் படத்தை ஏ.ஜி.அமித் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் தனித்தனி கேரக்டர்களை சொல்லும் 6 விதமான டீசர்கள் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நான்கு பேர் நகரில் நாலுவிதமாக ஏமாற்றி பிழைக்கிறார்கள். அவர்களை சுற்றி நடக்கிற கதை. தொழில்நுட்ப வட்டாரத்தில் நல்ல ரிசல்ட் உள்ள இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ, வாங்கி வெளியிட ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதுகுறித்து படத்தை தயாரித்த வொய்ட் பக்கெட் புரடக்ஷன் செந்தில் வீராசாமி கூறும்போது "எங்கள் முதல் தயாரிப்பான ராஜதந்திரம் மூலமாக ஃபாக்ஸ் ஸ்டார் போன்ற பெரிய நிறுவனத்துடன் கை கோர்க்க வாய்ப்பு கிடைத்தை எண்ணி பெருமையடைகிறேம். இதன் மூலம் எங்கள் படம் பெரும்பான்மையான மக்களை சென்றடைந்து பிரமாண்ட வெற்றிப் படமாகும். மார்ச் முதல் வாரத்தில் படம் வெளிவருகிறது" என்றார்.