டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவா மீண்டும் அஜீத் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அஜீத் நடிப்பில் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்துள்ள ஏ.எம்.ரத்னமே அஜீத்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார். அதோடு, முந்தைய இரண்டு படங்களையும் விட அதிக பட்ஜெட்டில் அப்படத்தை தயாரிக்கிறாராம். ஏற்கனவே தமிழில் பிரமாண்ட படங்களை இயக்கியிருக்கும் ஏ.எம்.ரத்னம் அந்த படத்தைப்பொறுத்தவரை எவ்வளவு செலவானாலும் பெறவாயில்லை. படம் பிரமாண்டமாக வந்தால் போதும் என்று சிவாவுக்கு அனுமதி கொடுத்து விட்டாராம். அதனால் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்க ஸ்கிரிப்ட் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.