அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நேற்று (ஜன 25) தேர்தல் நடந்தது. இதில் கலைப்புலி எஸ். தாணு தலைமையிலான ஒரு அணியினரும், ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான ஒரு அணியினரும், மூன்றாவதாக நடிகர் மன்சூர் அலிகான் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதில் தாணு தலைமையிலான அணியினர் அமோக வெற்றி பெற்றனர். துணைத் தலைவர் தேர்தலில் மட்டும் தாணு அணியைச் சேர்ந்த சீனிவாசன் தோல்வி அடைந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட பைவ் ஸ்டார் கதிரேசன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தாணு தலைமயிலான அணியினர் பதவியேற்க உள்ள நிலையில், அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. முன்னதாக காலையில் நடந்த ''டூரிங் டாக்கீஸ்'' பட ஆடியோ விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு உள்ளிட்ட வெற்றி பெற்ற பிற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு, இந்த அணி ஒற்றுமையாக செயல்பட வேண்டும், புது தயாரிப்பாளர்களுக்கும், என்னை போன்ற சிறு தயாரிப்பாளர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து அவர்களுக்கும் வாழ்வு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
தொடர்ந்து மாலையில் நடந்த ''வஜ்ரம்'' பட ஆடியோ வௌியீட்டு விழாவிலும் தாணு உள்ளிட்ட வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வஜ்ரம் படக்குழு சார்பில் தாணுவுக்கு ஆள் உயர மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இதேப்போன்று ஏகப்பட்ட திரைபிரபலங்களும், தாணு உள்ளிட்ட வெற்றி பெற்ற அணியினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.