இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அஜீத் - சிறுத்தை சிவா இணையும் படம் மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. ''சிறுத்தை'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அந்தப்படம் ஹிட் அடிக்க, அடுத்தபடியாக அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இந்தப்படமும் வெற்றி படமாக அமைந்தது. இதனையடுத்து அப்போதே மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண முடிவு செய்தனர். அதற்கு இடையில் கௌதம் மேனன் உடன், ''என்னை அறிந்தால்'' படத்தில் கமிட்டானார் அஜீத். இந்தப்படமும் முடிந்து இப்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. வருகிற பிப்ரவரி 5ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. தற்போது படத்திற்கான ஹீரோயின், பிற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை இறுதிசெய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்ததும் மார்ச்சில் படம் துவங்குகிறது. ஏற்கனவே அஜீத்தை வைத்து ஆரம்பம் மற்றும் இப்போது என்னை அறிந்தால் படத்தை தயாரித்துள்ள ஏ.எம்.ரத்னமே, இந்தப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜீத்தை வைத்து படம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.