'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியாவிலேயே அதிகம் படித்த நடிகை யார் தெரியுமா? சாந்தினி சாஷா. வசந்த் இயக்கும் தண்ணீர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். எம்பிஏ மார்க்கெட்டிங் கடினமான படிப்பு என்பார்கள், அதை முடித்து அதில் டாக்டரேட் வாங்கியிருப்பவர் சாந்தினி. சோனி நிறுவனத்தில் அதிகாரியாகவும் இருக்கிறார்.
மிஸ்.இந்தியா போட்டியில் மிஸ்.போட்டோஜீனிக்கா வெற்றி பெற்றவரை கன்னட நடிகர் உபேந்திரா கன்னட சினிமாவுக்கு அழைத்து வந்தார். கன்னடத்தில் சாந்தினி நடித்த ஏ, ஏகே 47 என்ற இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது. போஜ்புரி, குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளர். சிறந்த நடிகைக்கான குஜராத் அரசின் விருது பெற்றிருக்கிறார். இப்போது தண்ணீர் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
தண்ணீர் படத்தில் சென்னை நகரில் வாழும் நடுத்தரகுடும்பத்து பெண்ணாக நடிக்கிறார். படத்தில் டப்பிங் பேசுவதற்காக இப்போதே தமிழ் கற்று வருகிறார். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியில் சாந்தினியே டப்பிங் பேசிவிடுவார்.