மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ' மற்றும் 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' (அப்பா.. எவ்வளவு நீளமான பெயர்) என இரண்டு படங்களிலுமே அவரது நண்பனாய் துணைக்கு வந்த நடிகர் சன்னி வெய்னை அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது.. சீரியஸ் காமெடி, குணச்சித்திரம் என வெரைட்டியாக கலந்துகட்டி அடிக்கும் சன்னி, தற்போது 'அப்பவும் வீஞ்சும்' என்கிற படத்தில் பாடகராக நடிக்கிறார். நம்ம ஊரில் ஹிட்டடித்த 'ஜிகர்தண்டா' மாதிரி, வேறு ஒரு ட்ராக்கில் மியூசிக் த்ரில்லராக இந்தப்படம் உருவாகிறதாம். கோவாவில் இருந்து கேரளாவுக்கு வரும் இசைக்கலைஞனான சன்னிக்கு, பிரதாப் போத்தன்-ரம்யா கிருஷ்ணன் தம்பதியினர் நண்பர்களாகின்றனர்.. ஆனால் அதன்பின்னர் நடக்கும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் எதுவும் பார்வையாளர்களால் யூகிக்க முடியாதபடி இருக்கும் என்கிறார் படத்தை இயக்கும் விஸ்வநாதன்.