தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்பு சினி ஆர்ட்ஸ் மற்றும் பசங்க புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த 15ஆம் தேதி வெளியானது. டீஸர் வெளியான 10 நாட்களில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த டீஸரைக் பார்த்துள்ளனர்.. சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் பார்த்ததால்தான் இது நம்ம ஆளு டீஸருக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறாராம் சிம்பு.
என் படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி. நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கும், என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலப்படுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன் என்று புளகாங்கிதப்பட்டிருக்கிறார் சிம்பு.
அதுமட்டுமல்ல, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக நடந்து கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார். டீஸருக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து படம் ஹிட்டாகும் என்று சொல்ல முடியாது. டீஸரில் சாதனை படைத்த அஞ்சான், கோச்சடையான், லிங்கா ஆகிய படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. இதை கவனத்தில் கொள்ளாமல் ஆட்டம்போட்டால்...ஆட்டம் க்ளோஸ்தான் என்பதை சிம்பு நினைவில் கொள்வது நல்லது!