Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டப்பிங்கை மாற்றியதால் எல்லாம் மாறிப்போச்சு! - ஹன்சிகா புலம்பல்

26 ஜன, 2015 - 10:15 IST
எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கில் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருபவர் சவீதா. தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை சிம்ரன், ஐஸ்வர்யாராய், ஜோதிகா, ஜெனிலியா, நயன்தாரா, தமன்னா, காஜல்அகர்வால், ஹன்சிகா, இலியானா, அமலாபால் என தமிழ் தெரியாத ஏராளமான நடிகைகளுக்கு தமிழில் டப்பிங் பேசியவர் இவர்தான். முக்கியமாக, இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியாக பேசாமல், அவர்களது தோற்றத்துக்கு தகுந்தபடி தனது குரலை மாற்றி பேசி விததியாசப்படுத்தி காட்டியவர் சவீதா. அதிலும், அவர்களது பேஸ் ரியாக்சன் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் இவர் தனது குரலினால் அதை சரிபடுத்தி பேசி வருகிறார். அதன்காரணமகாவே வடஇந்தியாவில் இருந்து எந்த நடிகைகள் தமிழில் நடித்தாலும் சவீதாவை டப்பிங் பேச வைத்து வருகிறார்கள்.அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் டப்பிங் பேசுபவர்களில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சவீதா.


இந்தநிலையில், மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகா என்ட்ரி ஆனதில் இருந்து அவருக்கு இவர்தான் டப்பிங் பேசி வருகிறார். ஆனால், மீகாமன் படத்தில் அவரை பேச அழைத்தபோது அவருக்கான சம்பளம் அதிகமாக இருந்ததால் இன்னொருவரை வைத்து பேசி விட்டார்கள். அதையடுத்து படம் பார்த்த ஹன்சிகாவுக்கு பெரிய அதிர்ச்சியாம். காரணம், அந்த குரல் அவருக்கு செட்டாகவேயில்லை என்பதோடு, சவீதா பேசியிருந்தால் எனது மைனஸைகூட ப்ளசாக்கும் அளவுக்கு பேசியிருப்பார். ஆனால் புதிதாக பேசியிருப்பவர் அப்படி பேசவில்லை என்று புலம்பினாராம் ஹன்சிகா.


அதோடு, அடுத்தபடியாக தான் நடித்து வரும் படங்களில் தனக்கு சவீதாவையே டப்பிங் பேச வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களிடம் முன்கூட்டியே வலியுறுத்தி வருகிறார் ஹன்சிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in