நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
இயக்குனர் வெற்றி மாறனுடன் இணைந்து காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வரும் தனுஷ். 3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களை தயாரித்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கி சட்டை, விஜயசேதுபதி நடிக்கும் நானும் ரெளடிதான் மற்றும் தான் நடிககும் ஷமிதாப், மாரி , சூதாடி ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார்.
இப்படி தான் தயாரிக்கும் ஒவ்வொரு படங்களின் கதைளையும் ரொம்ப கவனமாக செலக்ட் பண்ணி நடித்து வரும் தனுஷ், விஜயசேதுபதி நடிக்கும் நானும் ரெளடிதான் படத்தின் கதையை மட்டும், அவர் பேசிய ஒரு பதிலில் இருந்தே உருவாக்குமாறு கூறினாராம். அதாவது, ஒருமுறை விஜய் டிவி நடத்திய விருது விழாவில், மேடையேறிய விஜயசேதுபதியிடம், நீங்கள் ஒரு நடிகையை கடத்துவதாக நினைத்தால், எந்த நடிகையை கடத்துவீர்கள்? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர்.
அப்போது, சற்றும் யோசிக்காமல் நயன்தாரா என்று பதிலளித்தார் விஜயசேதுபதி. அவரது இந்த பதிலைக் கேட்டு அந்த விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா உள்பட அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதில் தனுசும் ஒருவர். விளைவு, நயன்தாராவை கடத்துவேன் என்று அவர் சொன்ன அந்த பதிலை வைத்தே இப்போது நானும் ரெளடிதான் படத்தின் கதையை தயார் செய்ய சொல்லி படமாக்கி வருகிறார் தனுஷ்.
இந்த படத்தில் கதைப்படி கேது கேளாத பெண்ணான நயன்தாராவை ரவுடிகள் கடத்தி சென்று விடுவார்களாம். அவரை விஜயசேதுபதி மீட்டு வருவதுதான் இந்த படத்தின் கதையாம்.