இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் கீழ் உள்ள 24 சங்கங்களில் முக்கியமான சங்கம் தயாரிப்பு நிர்வாகிகள் (புரொடக்ஷன் மானேஜர்) சங்கம். இந்த சங்கத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. எஸ்.ஆர்.எம் பல்கலைகழக நிறுவனர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் குத்துவிளக்கேற்றினார். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, பி.எல்.தேனப்பன், ராதாகிருஷ்ணன், கே.எஸ்.சீனிவாசன், சுபாஷ் சந்திரபோஸ், இயக்குனர்கள் சுசீந்திரன். ஆர்.கே.செல்வமணி, ஹரி, நடிகர்கள் விஜய் சேதுபதி, பாலாசிங், , சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவி நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத் தலைவர் பாலகோபி, செயலாளர் என்.சுவாமிநாதன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.