இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியான 'ஐ' திரைப்படம் 10 நாட்களைக் கடந்த பின்னும் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் முதல் நாளன்று வெளியான திரையரங்குகளில் ஏறக்குறைய அதே அளவிற்கு திரையரங்குகள் இரண்டாவது வாரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.
பொங்கல் விடுமுறை தினத்தில் மட்டுமே, அதாவது படம் வெளியான ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 130 கோடி ரூபாய் அளவிற்கு 'ஐ' படம் வசூலித்திருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன் பின் கடந்த ஐந்து நாட்களாக ஓரளவிற்கு வசூல் குறைந்திருந்தாலும் பல திரையரங்குகளில் 70 சதவீத அளவிற்கு நிரம்பியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஐ' படத்திற்குப் போட்டியாக வேறு எந்தப் படமும் வெளிவராத நிலையில் இந்த வாரம் மொத்தம் உள்ள மூன்று விடுமுறை நாட்களிலும் பல திரையரங்குகளில் படம் ஏற்கெனவே புக்கிங் செய்ப்பட்டுவிட்டதாம்.