Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷா நடிப்புக்கு முழுக்கு....?

25 ஜன, 2015 - 10:32 IST
எழுத்தின் அளவு:

த்ரிஷா - வருண் மணியன் நிச்சயதார்த்தம் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. நேற்று சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் திரையுலகினருக்கு புதிய ஜோடி 'பார்ட்டி'யும் கொடுத்து விட்டார்கள். தென்னிந்தியத் திரையுலகின் பல பிரபலங்கள் அதில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களின் திருமணம் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போடப்படாமல் விரைவிலேயே நடந்து விடும் என்றும் தெரிகிறது.


த்ரிஷா தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக 'லயன்' படத்திலும் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'அப்பாடக்கர்' ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏற்கெனவே அவர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ள 'பூலோகம்' திரைப்படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. விரைவில் அஜித் ஜோடியாக நடித்துள்ள 'என்னை அறிந்தால்' திரைப்படம் வெளிவர உள்ளது. திருமணத்திற்குப் பிறகு த்ரிஷா சினிமாவை விட்டு விலக மாட்டேன், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால், அவரைத் தேடி வேறு எந்த புதுப்படங்களும் வரவில்லை என்று தெரிகிறது.


பொதுவாக, திரையுலகில் ஒரு நடிகைக்குத் திருமணமாகிவிட்டாலே அவரை புறக்கணித்து விடுவார்கள். ரசிகர்கள் திருமணமான நடிகைகளை ஹீரோயின்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அதற்கான காரணத்தையும் ரசிகர்கள் மீதே போட்டுவிடுவார்கள். புதுப்படம் எதுவும் வராத காரணத்தால் த்ரிஷா தானாகவே முன்வந்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்துகிறேன் என்று சொல்வார் என்றுதான் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in