மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இன்றைய சூழலில் 'அடல்ட்ஸ் ஒன்லி' சினிமாக்களும் ஆபாச வீடியோக்களும் அவற்றை விரும்பும் பார்வையாளர்களை இன்டர்நெட், டிவிடி என ஏதோ ஒன்றின் வழியாக சென்றடைந்து விடுகின்றன. ஆனால் 90களில் இதுபோன்ற 'அடல்ட்ஸ் ஒன்லி' படங்களை ஓட்டுவதற்கென்றே சில நகரங்களில் ஒதுக்குப்புறமான இடங்களில் தியேட்டர்கள் அமைந்திருந்தன. வருமானம் இல்லாததால் தியேட்டரை இழுத்து மூட விரும்பாமல் இப்படி சம்பாதிக்கவேண்டியிருக்கிறது என்று சொல்லி 'பிரம்மன்' படத்தில் கூட சசிகுமாரின் தியேட்டரில் சந்தானம் 'அந்த' மாதிரி ஓட்டுவாரே... அப்படித்தான்..
இப்போது மலையாளத்தில் விஷ்ணு விஜயன் என்பவர் இயக்கிவரும் 'அடூரும் தோப்பிலுமல்லாத பட்ஷி' என்கிற படத்தில் அப்படி ஒரு தியேட்டரின் ஓனராகத்தான் நடிக்கிறார் பிருத்விராஜின் அண்ணனான இந்திரஜித். 90களில் நடைபெறும் கதைக்களத்தில் இந்த மாதிரி தியேட்டரை நடத்தும் ஒருவன் எதார்த்த வாழ்வில் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பிரச்சனைகள் தான் கதையாக பின்னப்பட்டுள்ளது. கதாநாயகிகளாக ரட்சனா நாராயணமூர்த்தி, '1983' புகழ் சிருந்தா ஆஷப் ஆகியோர் நடிக்கிறார்கள்.