Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்ப் படத்திற்காக 'குண்டான' தமன்னா!

24 ஜன, 2015 - 16:11 IST
எழுத்தின் அளவு:

தமன்னா தற்போது ஆர்யா ஜோடியாக 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக அவருடைய தோற்றத்தைக் கொஞ்சம் குண்டாகத் தெரிய வேண்டும் என்பதற்காக 'வெயிட்' போட்டிருக்கிறாராம். 'பாகுபலி' படத்திற்காக உடலை இளைத்து சரியான எடையுடன் இருந்தவர் தற்போது படத்திற்காக குண்டாக மாறியிருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. பொதுவாக ஹீரோக்கள்தான் நடிப்பிற்காக உடலை ஏற்றுவதும், குறைப்பதும் என செய்வார்கள். அதிலும் கமல்ஹாசன், விக்ரம் போன்றோர்தான் அதையும் அதிகமாகச் செய்வது வழக்கம். தற்போது அவர்களைப் போல் தமன்னாவும் அவருடைய எடையை அதிகரித்திருக்கிறார் என்கிறார்கள்.


தமிழில் கடைசியாக அஜித் ஜோடியாக 'வீரம்' படத்தில் நடித்தார் தமன்னா. அதன் பின் கடந்த வருடம் எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆர்யா ஜோடியாக அவர் நடிப்பதும் இதுவே முதல் முறை. இந்தப் படத்தைத் தவிர அவர் தற்போது, ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடித்துள்ள 'பாகுபலி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த தமன்னா திடீரென தமிழ்ப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவராகவே தவிர்க்கவில்லை, சில நிர்ப்பந்தங்கள்தான் அவரைத் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. அதன் பின் அஜித் தான் தமன்னாவிற்கு மீண்டும் மறு பிரவேசம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in