ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வந்த இந்தப் படத்தை வருகிற 30ந் தேதி வெளியிடுகிறார். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ஒரு கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கிறார். இளம் வயதில் தான் காதலித்த ஒரு பெண்ணைத் வயதான காலத்தில் தேடிச் செல்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இதுவரை படத்தின் ஸ்டில்களையோ, படம் பற்றிய விபரங்களையோ அவர் முறையாக அறிவிக்கவில்லை. தற்போது திடீரென வருகிற 30ந் தேதி படம் ரிலீஸ் என புரமோஷன் வேலைகளை தொடங்கி இருக்கிறார். படத்தின் ஸ்டில்களை வெளியிட்டிருக்கிறார். அதோடு 28 விநாடி அனிமேஷன் டீசர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் எஸ்.ஏ.சந்திரசேகர் இளைஞரைப்போல உடை அணிந்து கையில் ஒற்றை ரோஜாவுடன் ஒரு காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து நடந்து வருகிறார். பூங்காவில் ஒரு பெண் நீச்சல் உடையில் ஸ்டைலாக படுத்திருக்கிறார். அவரைப் பார்த்துதும் முகமலர்ச்சியுடன் அவரை தாண்டிக் குதித்து அந்த ரோஜாவை அவர் அந்த பெண்ணிடம் கொடுக்க அந்தப் பெண் கண்ணடிப்பதோடு டீசர் முடிகிறது. டீசரை யூ டியூப்பில் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கமெண்டுகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.