ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நீரஜ் பாண்டே இயக்கத்தில், அக்ஷ்ய் குமர், ராணா டகுபதி, டாப்சி, மாதுரிமா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று(ஜன. 23ம் தேதி) வௌியாகியுள்ள படம் பேபி. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பு இருக்கும். அதன்படி பேபி படத்தையும் அங்கு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. பேபி படம் பயங்கரவாதத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி அங்கு இந்தப்படத்தை தடை செய்துள்ளனர். பேபி படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் ரஷீத் நாஸூம் நடித்துள்ளார். ஆனாலும் இப்படத்தை அங்கு தடை செய்துள்ளனர். முன்னதாக ஏக்தா டைகர் உள்ளிட்ட சில படங்களுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.