Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரபர படப்பிடிப்பில் 'தாரை தப்பட்டை'

24 ஜன, 2015 - 12:33 IST
எழுத்தின் அளவு:

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் தஞ்சாவூரில் ஆரம்பமாகி அங்கேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கமான பாலா படம் போல் அல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். யூனிட்டில் உள்ளவர்களே இது பாலா படம்தானா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இவ்வளவு வேகமாக படப்பிடிப்பு நடைபெறுகிறதே என்கிறார்களாம்.


இளையராஜாவின் இசையில் எப்போதோ பத்து பாடல்களுக்கு மேல் படத்திற்காக இசையமைக்கப்பட்டு விட்டது. கரகாட்டத்தைப் பற்றிய படமாக உருவாகும் இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி இருவரும் கரகாட்டக் கலைஞர்களாக நடித்து வருகிறார்கள். இதற்காக அவர்களிருவரும் படப்பிடிப்பிற்கு முன் சில மாதங்களாகவே கரகாட்டம் பயிற்சி எடுத்துக் கொண்டனர். படப்பிடிப்புக்கு முன் இந்தப் படம் பற்றிய பல வதந்திகள் பரவின. முதலில் எடுத்த காட்சிகளை திருப்தியில்லை என பாலா தூக்கி வீசி விட்டதாகவும் கூட சொன்னார்கள். ஆனால், அதெல்லாம் ஒரு டெஸ்ட் ஷுட்தான் என்றும் பின்னர் தகவல்கள் வெளியாகின.


பாலாவின் முந்தைய படங்களைப் போலவே இந்த 'தாரை தப்பட்டை' படத்திற்கும் வழக்கம் போலவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in