ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்க இளையராஜா இசையமைக்க, பால்கி இயக்கியுள்ள 'ஷமிதாப்' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. வட இந்தியாவில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்ட அமிதாப் பச்சன் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்து விட்டார். அமிதாப் கண்டிப்பாக வருகிறார், காலை முதல் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். அதன் பின் அவரை மாலை வருகிறார், நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டுவிட்டு உடனே திரும்புகிறார் என நிகழ்ச்சியையும் முன் கூட்டியே மாற்றி வைத்தார்கள். இருந்தாலும் அவர் கடைசி வரை வரவேயில்லை. இளையராஜாவும் கலந்து கொள்வதாகச் சொன்னார்கள், அவரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
இயக்குனர் பால்கி, நாயகன் தனுஷ், நாயகி அக்ஷரா ஹாசன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். அமிதாப் நிகழ்ச்சிக்கு வருவார் என்று சிட்டியை விட்டு வெகு தொலைவில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்ற பலரும் ஏமாற்றமடைந்தனர். வழக்கம் போலவே பால்கி இளையராஜா, அமிதாப், தனுஷ், அக்ஷரா ஆகியோரை அதிகம் பாராட்டிப் பேசினார். இந்தப் படத்தை தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கும் போது அமிதாப் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றியது பலருக்கம் வருத்தமளிப்பதாக அமைந்துவிட்டது.