Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்திய சினிமாவின் பவர்புல் நடிகர் தனுஷ் - பால்கி புகழாரம்!

23 ஜன, 2015 - 19:23 IST
எழுத்தின் அளவு:

ராஞ்சனா படத்திற்கு பிறகு இந்தியில் தனுஷ் நடித்துள்ள இரண்டாவது படம் ஷமிதாப். நம்மூர் இயக்குநர் பால்கி, நம்மூர் இசையமைப்பாளர் இளையராஜா, நம்மூர் ஔிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரது கூட்டணியில், பாலிவுட்டின் ''பிக் பி'' அமிதாப் உடன் தனுஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவருடன் கமலின் இரண்டாவது வாரிசான அக்ஷ்ராஹாசன், நடிகையாக தனது சினி பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து படம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இருதினங்களுக்கு முன்னர் ஷமிதாப் படத்தின் இசை வௌியீடு மற்றும் இசைஞானி இளையராஜாவுக்கு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கான பாராட்டு விழாவும் சிறப்பாக நடந்தது.


இந்நிலையில் ஷமிதாப் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் நடிகர் தனுஷ், நடிகை அக்ஷ்ராஹாசன் மற்றும் இயக்குநர் பால்கி ஆகியோர் பங்கேற்றனர்.


ஷமிதாப் என்றால் இளையராஜா - தனுஷ்


நிகழ்ச்சியில் தனுஷ் பேசுகையில், ராஞ்சனா படத்திற்கு பிறகு இந்தியில் ஒரு நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போது தான் பால்கி சார் இந்த கதையை சொன்னார். மிகவும் பிடித்து போனது, உடனே நடிக்க சம்மதம் சொன்னேன். இந்தப்படத்தில் அமிதாப் பச்சன் உடன் நடித்துள்ளேன். அமிதாப்பை இதற்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவருடன் நடித்தபோது எனக்கு பயம் இல்லை, ஆனால் கொஞ்சம் தயக்கம் தான் இருந்தது. என்னை பொறுத்தவரை ஷமிதாப் படம் என்றால் அது முழுக்க முழுக்க இளையராஜா சார் தான். அவ்வளவு பிரமாதமான இசையை கொடுத்திருக்கிறார். அக்ஷ்ராவை பொறுத்தமட்டில் அவரது இரத்தத்திலேயே நடிப்பு ஊறிபோய் உள்ளது, அதனால் இந்தப்படத்தில் அசால்ட்டாக நடித்தார் என்றார்.


முதல்படமே ஷாக் - அக்ஷ்ரா


அக்ஷ்ராஹாசன் பேசுகையில், முதல்படமே பெரிய படமாக அமைந்தது அதிர்ச்சியாக இருந்தது. அதேசமயம், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. ஷமிதாப் படத்தில் தனுஷ் ஒரு பவர்புல் ரோலில் நடித்துள்ளார் என்றார்.


இந்திய சினிமாவின் பவர்புல் நடிகர் தனுஷ் - பால்கி


இயக்குநர் பால்கி பேசுகையில், ஷமிதாப் படத்தில் அமிதாப், தனுஷ் ஆகிய இருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். தனுஷ் ஒரு திறமையான நடிகர். என்னை பொறுத்தவரை இந்திய சினிமாவின் பவர்புல் நடிகர் தனுஷ் தான். அதேப்போல் இசை என்றால் ராஜா சார் தான். எனக்கு அவரை தவிர வேறு யாரையும் தெரியாது. ஷமிதாப் படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்றவர், என்படத்தில் நடிக்க யாரும் தயாராக இருந்தால் நிச்சயம் தமிழிலும் படம் எடுப்பேன் என்று கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in