மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் இன்று(ஜன., 23ம் தேதி) சிறப்பாக நடந்தது. சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த சில வருடங்களாகவே இவரது திருமணம் பற்றிய செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வந்தன. அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வௌியாகின. ஆனால் இதனை ஆரம்பத்தில் மறுத்தார் த்ரிஷா.
பின்னர் ஒருவழியாக ஜனவரி 7ம் தேதி, தான் வருண் மணியனை திருமணம் செய்ய இருப்பதாகவும், ஜனவரி 23ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் த்ரிஷா அறிவித்தார்.
அதன்படி சென்னையில் இன்று(ஜன 23ம் தேதி) த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. வைர மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். த்ரிஷா சிகப்பு நிற பட்டு புடவையும், வருண் மணியன் பட்டு வேஷ்டி, சட்டையும் அணிந்திருந்தனர். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சரத்குமார், ராதிகா, கமல், கௌதமி, பிரபு, விக்ரம் பிரபு, அமலா பால், விஜய், ரம்யா கிருஷ்ணன், சித்தார்த் உள்ளிட்ட திரைபிரபலங்களுடன் இருவீட்டாரது நெருங்கி உறவினர்களும், இருவரது நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போது த்ரிஷா, சில படங்களில் நடித்து வருகிறார். அந்தப்படங்களை முடித்து கொடுத்துவிட்டு திருமணம் செய்ய இருக்கிறார். அநேகமாக இந்தாண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என தெரிகிறது.