இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் புரமோசனுக்காக ஒரு பாடலை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் கனிரசம்... என்று தொடங்கும் பாடலை ரம்யா நம்பீசன் பாடி உள்ளார். இந்த பாடல் படத்தில் இடம்பெற வைக்க முயற்சித்தார்கள். அதற்கான வாய்ப்பு படத்தின் கதையில் இல்லாததால். இப்போது அதனை புரமோசன் பாடலாக மாற்றி விட்டார்கள்.
படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் இந்தப் பாடலை தற்போது படமாக்கி வருகிறார்கள். இதற்காக ரம்யா நம்பீசன் 5 நாட்கள் கூடுதலாக கால்ஷீட் ஒதுக்கி கொடுத்துள்ளார். சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சொக்கிதானி என்ற இடத்தில் செட்போட்டு பாடலை படமாக்கி வருகிறார்கள். இந்த பாடல் 80களில் வெளிவந்த பாடல்களின் பாணியில் இருக்கும்.