அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சமீபகாலமாக விக்னேஷ் நடித்து வெளியாகும் படங்கள் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. அவர் உயிரைக்கொடுத்து நடிக்கும் படங்கள்கூட இப்படி போய்க்கொண்டிருப்பதால், தற்போது இன்றைய சமூகத்தில் கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் உருவான அவன் அவள் எனறொரு படத்தில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்துள்ளார் விக்னேஷ். இந்த படத்தில் தேவிகா, சந்திரிகா என்ற இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். ராம்கிருஷ் மிர்னாலி என்பவர் படத்தை இயக்க, கார்ததிக்ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சரியான நேரத்தில் வெளியிட்டால் தனக்கு வெற்றி கிடைப்பது உறுதி என்று கடந்த 6 மாதங்களாகவே படத்தை வியாபாரம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் விக்னேஷ். ஆனால், அவரது மார்க்கெட் மந்தமாக இருப்பதால் விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லையாம். அதனால் எஸ்.தாணுவிடம் படத்தை ரிலீஸ் பண்ணித்தருமாறு கேட்டாராம் விக்னேஷ். ஆனால் அவர் படத்தை புரோமோஷன் செய்வதற்கு முதலில் ஒரு தொகை வேண்டும் என்று கேட்டாராம். விளைவு, அதற்காக ஒரு பெருந்தொகையை கொடுப்பதற்குள் அந்த பணத்தைக்கொண்டே நாம் படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று பிரப்ரவரி 10ந்தேதிக்கு மேல் படத்தை வெளியிட தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளில் தற்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார் விக்னேஷ்.