தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதைப் பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஒரு மாற்றத்திற்கு பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்ட சில முக்கியமான படங்களின் டிரைலர்கள் யு டியுபில் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதைப் பார்ப்போம். பொங்கலை முன்னிட்டு கமல்ஹாசனின் உத்தம வில்லன், கார்த்தியின் கொம்பன், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, ஆகிய படங்களின் டிரைலர்களும், அதற்கு ஒரு வாரம் முன்பு தனுஷின் அனேகன் டிரைலரும் வெளியிடப்பட்டன.
கமல்ஹாசனின் உத்தம வில்லன் டிரைலரை இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை டிரைலரை 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். கார்த்தியின் கொம்பன் டிரைலரை 4 லட்சம் பேர் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான தனுஷின் அனேகன் டிரைலரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் வளர்வதற்குக் காரணமாக இருந்த தனுஷ் படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயனின் படம் முறியடித்துவிட்டது.
அனேகன், காக்கி சட்டை ஆகிய இரண்டு படங்களுமே வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. அனேகன் படம் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகிறது. அனேகன் படத்திற்கு முன்பாக காக்கி சட்டை படம் கண்டிப்பாக வெளியாக வாய்ப்பில்லை என்பதை மட்டும் சொல்ல முடியும்.
டிரைலரிலேயே தனுஷை மிஞ்சியவர், படத்திலும் மிஞ்ச மாட்டாரா என்ன....?